Sri Lanka

மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவிப் பிரதமர் பதவி?


ஆகஸ்ட் 13, 2020: முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவிப் பிரதமர் பதவியை வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் வெற்றிக்கும், மூன்றில் இரண்டு பெரும்பானமையைப் பெறுவதற்கும் மூலகாரணமாயிருந்த சுதந்திரக்கட்சியின் தலவருக்கு வாக்களித்தபடியே நல்லதொரு பதவியைக் கொடுக்கவேண்டுமென பிரதமர் ராஜபகச விரும்புவதாகக் கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 ஆசனங்களே கிடைத்திருந்தாலும், அதன் தலைவர் சிறிசேன, பொலநறுவ மாவட்டத்தில் அமோக வெற்றியைப் பெற்றதும், பொதுஜன பெரமுன கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு உதவி புரிந்ததும் கவனந்தில் எடுக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது.

தற்போதுள்ள அரசியலமைபின்படி உதவிப் பிரதமர் பதவி என்று ஒன்றை வைத்துக்கொள்ள முடியாது என்பதனால், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட பின்னரே இப் பதவி வழங்கப்படுமெனக் கூறப்படுகிறது.