மைக்றோசொஃப்ட் இயக்குனர் சபையிலிருந்து விலகுகிறார் பில் கேட்ஸ்!

Spread the love
அறப்பணிகளில் முழுநேரமாக ஈடுபடத் திட்டம்

மார்ச் 13, 2020

மைக்றோசொஃப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல அறப்பணியாளருமான பில் கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குனர் சபையிலிருந்தும் அவரது நண்பரும் பங்காளியும், இன்னுமொரு அறப்பணியாளருமான வரென் பஃபெட்டுடன் நிர்வகித்த கூட்டு நிறுவனமான பேற்க்‌ஷையர் ஹதவே நிறுவனத்தின் இயக்குனர் சபையிலிருந்தும் ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

“உலக சுகாதாரம், அபிவிருத்திக் கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல அறப்பணிகளில் அதிக கவனத்தைச் செலுத்துவதற்காக நான் மைக்றோசொஃப்ட், பேர்க்‌ஷையர் ஹதவே ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குனர் சபைகளிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளேன்” என பில் கேட்ஸ் தனது லிங்ட்இன் சமூகத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இரண்டு நிறுவனங்களுமே ஸ்திரமாகவும் நல்ல நிலையிலும் உள்ளதால், விலகுவதற்கு இதுபோல் தருணம் வாய்க்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



“மிக்றோசொஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இயக்குனர் சபையிலிருந்து விலகுவதால், நிறுவனத்திலிருந்து விலகுவதென்பதல்ல. அது எனது வாழ்நாள் பணியின் ஒரு அங்கம். நிறுவனத்தின் எதிர்கால இலக்கை அடைவதற்காகக் கடுமையாக உழைக்கும் சத்தியா மற்றும் அவருடன் பனியாற்றும் தொழில்நுட்பத் தலைவர்களுடன் தொடர்ந்தும் இனைந்து பணியாற்றவுள்ளேன். நிறுவனம் கண்டுவரும் முன்னேற்றத்திலும், அதை உலகத்தின் நன்மை பொருட்டு எப்படிப் பயணிக்கும் என்பதிலும் எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

கேட்ஸ், போல் அல்லென் என்பவருடன் இணந்து 1975 இல், மைக்றோசொஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். 2000 ஆண்டு வரை அதன் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இருந்தார். அவருக்குப் பிறகு ஸ்டீவ் பாமர் அப் பதவியை ஏற்றிருந்தார். 2014 இலிருந்து சத்யா நடெல்லா அப் பதவியிலுள்ளார். 2014 வரை, கேட்ஸ், நிறுவனத்தின் இயக்குனர் சபையில் இருந்தாலும் 2008 இல் அவரும் அவரது துணைவியார் மெலிண்டாவும் இணைந்து ஆரம்பித்த ‘பில் அண்ட் மெலிண்டா ஃப்வுண்டேசன்’ என்ற அறப்பணி ஸ்தாபனத்தில் உலகம் பூராவும் அறப்பணிகளைச் செய்து வருவதில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். அவரது ஆரம்பகால்ப் பங்காளியான போல் அல்லென் 2018 இல் காலமானார்.



மைக்றோசொஃப் நிறுவனம் 1986 இல் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. அதன் பங்குகளில் 1.36% வீதமானவை மட்டுமே பில் கேட்டுக்குத் தற்போது சொந்தமாயுள்ளன. தற்போது அந் நிறுவனத்தின் மதிப்பு, $1.21 ட்றில்லியன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>