Spread the love

மே 19 ம் நாளை இலங்கை அரசு தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடுகிறது. அன்று வரலாறு காணாத அளவுக்கு, 14,917 இராணுவத்தினர் பதை உயர்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல, சிறிஜயவர்த்தனபுரவிலிருக்கும் தேசிய வீரர் தூபிக்கு முன் நடைபெறவிருக்கும் இன் நிகழ்விற்கு கோதாபய ராஜபக்ச அவர்கள் தலைமை தாங்குவார். போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை ஒழுங்கு செய்துள்ளார்.

40,000 த்துக்கும் மேல் உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தமிழ் மக்களுக்கு இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.

அனைத்துலகத் தமிழ் மக்களும் மே 18ம் நாளைத் தமது இனப்படுகொலை நாளாக அனுட்டித்து வருகிறார்கள்.


Print Friendly, PDF & Email
Related:  M.A. Sumanthiran writes to HRCSL