IndiaSpirituality

மேல்மருவத்தூர் ‘அம்மா’ பங்காரு அடிகளார் மரணம்

‘அம்மா’ எனப் பக்தர்களால் அழைக்கப்பட்டவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனருமாகிய பத்மசிறீ பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) அவரது 82 ஆவது வயதில் சுகவீனம் காரணமாக மரணமானார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவைகளுக்காக இந்திய மத்திய அரசு 2019 இல் அவருக்கு பத்மசிறீ விருதை வழங்கிக் கெளரவித்திருந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற பெயரில் அவர் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தில் கர்ப்பக்கிருகத்தினுள் பெண்கள் சென்று பூசைகளைச் செய்வதற்கு அவர் அனுமதித்திருந்தார்.

அது மட்டுமல்லாது ஆதிபராசக்தி மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார தர்ம ஸ்தாபனம் என்ற பெயரில் அவர் உருவாக்கிய அறக்கட்டளை மூலம் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் வாழும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கி வந்தார்.

இவரின் இழப்பை முன்னிட்டு ரி.ரி.வி. தினகரன், வானதி சிறினிவாசன், வேல் முருகன் போன்ற தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் அடிகளாரின் மறைவிற்காக இரங்கலுரைகளை வெலியிட்டுவருகிறார்கள்.