மேலுமொரு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் – பங்குபற்றிய ஒருவருக்கு திடீர் சுகயீனம்

மேலுமொரு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் – பங்குபற்றிய ஒருவருக்கு திடீர் சுகயீனம்

Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தொன்றை, மனிதரில் பரிசோதனை செய்துகொண்டிருந்த ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் தனது பரிசோதனை நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. பங்குபற்றியவர்களில் ஒருவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டதிலிருந்து இப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட (Phase 3) மனிதப் பரிசோதனைகளுக்காக இந் நிறுவனம் உலகம் முழுவதும் 200 பரிசோதனைத் தளங்களை ஏற்பாடு செய்திருந்தது. அஸ்ட்றாசெனீகா எனப்படும் இத் தடுப்பு மருந்து ஏற்படுத்திய தாக்கம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வாண்டெர்பில்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஸ்காஃப்னெர் தெரிவித்துள்ளார்.

“கட்டுப்பாடற்ற நீரிழிவு, சூலகப் புற்று, மாரடைப்பு போன்ற விடயங்களுக்காக இப் பரிசோதனைகள் நிறுத்தப்படுவதில்லை. மாறாக, நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட தீவிர பாதக நிகழ்வுகள் (serious adverse events) ஏற்பட்டால் மட்டுமே இப்படியான பரிசோதனைகள் நிறுத்தப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பல மாநிலங்களிலும், ஆர்ஜெண்டீனா, பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிக்கோ, பெரு, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் J&J தனது பரிசோதனைகளை நிகழ்த்தி வந்தது. உலகில் கோவிட் தடுப்பு மருந்தைப் அப்ரிசோதித்துவரும் 10 நிறுவனங்களில் J&J யும் ஒன்று. அமெரிக்க அரசு இதற்காக $1.45 பில்லியன் நிதியை இந் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது.

செப்டெம்பர் மாதத்தில், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், இதே போன்ற காரணங்களுக்காகத் தனது தடுப்பு மருந்துப் பரிசோதனைகளை நிறுத்தியிருந்தது.

Print Friendly, PDF & Email