மேற்கு பபுவா விடுதலை | இந்தோனேசியாவின் அடக்குமுறை

ஜாகர்த்தா, இந்தோனேசியா: மேற்குப் பபுவா பிரதேசத்தில் பிரிவினைவாதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பலர் காயமுற்றதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன. காவல்துறை இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச மன்னிப்பு இயக்கம் (இந்தோனேசியா) மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன பலர் காயமுற்றதை உறுதிப்படுத்தியுள்ளன.

மேற்கு பபுவா

சென்ற வாரம், ஜாவாவில் கல்வி கற்கும் பப்புவா மாணவர்கள் தனிநாட்டுக்கான ஆதரவு ஊர்வலமொன்றை நடத்தியதற்காகப் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். சிலர் இந்தோனேசியக் கொடியைச் சேதப்படுத்தினரென்ற குற்றச்சாட்டில் கைத்செய்யப்பட்டிருந்தனர். பல மாணவர்கள் உள்ளூர் வாசிகளால் சூழப்பட்டு “குரங்குகள்”,”பன்றிகள்” என இனவாதப் பேச்சுக்களினால் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய அரசு மேற்கு பபுவா பிரதேசத்தில் இணையச் சேவைய முடக்கியுள்ளது.

மேற்கு பபுவா பிரதேசத்திலுள்ள மிகப் பெரிய நகரமான சோறோங் உட்படப் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பபுவாவிற்குச் செல்வது தடைசெய்யப்படுள்ளது.

பிரிவினைக் கோரிக்கை

1960 வரையில் மேற்குப் பபுவா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. டச்சுக்காரர் விட்டுப் போகும்போது 1969இல், 1000 பேர் மட்டுமே வாக்களிக்கக்கூடிய ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம்மேற்கு பபுவாவைத் தன்னுடன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதை மேற்குப் பபுவா மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்து, மேற்கு பபுவா விடுதலை இராணுவம் என்ற பெயரில் பப்புவா மக்களால் பிரிவினைக்கான ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசியர்களால் அவதூறுக்குள்ளாகும் மேற்கு பபுவா மக்கள்

ஐ.நா. வின் அவமதிப்பு

செப்டம்பர் 2017 இல், வெளிநாட்டில் வதியும் பபுவா சுதந்திரப் போராட்டத்தின் தலைவர் ஒருவர் இந்தோனேசியாவிலிருந்து பபுவா பிரிவதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தக் கோரி ஐ.நா.விற்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார். பெருந்தொகையான பபுவா மக்கள் கையெழுத்திட்ட இவ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள ஐ.நா. மறுத்துவிட்டது. இது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.

செப்டம்பர் 2017 இல், வெளிநாட்டில் வதியும் பபுவா சுதந்திரப் போராட்டத்தின் தலைவர் ஒருவர் இந்தோனேசியாவிலிருந்து பபுவா பிரிவதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தக் கோரி ஐ.நா.விற்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார். பெருந்தொகையான பபுவா மக்கள் கையெழுத்திட்ட இவ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள ஐ.நா. மறுத்துவிட்டது. இது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.

இப் பிரதேசம் செல்வச் செழிப்பைத் தரவல்ல பல இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் இது இந்தோனேசியாவிலேயே ஏழ்மையுள்ள பிரதேசமாக இருக்கிறது. பல மனித உரிமை மீறல்கள் இங்கு ந்டைபெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், சுதந்திரப் போராட்டக்காரர் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இராணுவம் எடுத்த நடவடிக்கையின்போது 35,000 பொதுமக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

2014 இல் மேற்கு பபுவாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, ‘மேற்குப் பப்புவாவிற்கான ஐக்கிய விடுதை இயக்கம்’ (United Liberation Movement for West Papua) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இஸ்லாமிய, தேசிய இயக்கங்கள் மேற்கு பபுவா மக்களைத் துன்புறுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.