மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமனம்! -

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமனம்!

Spread the love

சர்வதேச அரங்கில் சிறீலங்காவிற்கு அவமானத்தை ஏற்படுத்தினார் சிறீசேன

போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தின் தளபதியாகப் பதவி உயர்த்தியதன் மூலம் ஜனாதிபதி சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அவப்பெயரைப் பெற்றுக்கொடுத்ததுமல்லாமல் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகளையும் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP) என்ற அமைப்பு சில்வா மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு 137 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சில்வா போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருக்கிறார் என்பதற்கு தேவைக்குமதிகமான சான்றுகளை இவ்வறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. அப்படியிருக்க இராணுவத்தின் அதி முக்கிய பதவிக்கு அவர் தரமுயர்த்தப்பட்டிருக்கிறார். இது வரப்போகும் தேர்தலை முன்னிட்டுச் செய்யப்பட்ட காரியமாகும்.

Jasmin Sooka, Executive Director – ITJP

“இந்த மனிதன் சர்வதேச சட்டங்களை வேண்டுமென்றே மீறியிருக்கும் ஒருவர். அவரது நியமனம் நாடு முழுவதும் மட்டுமல்ல, விசேடமாக, 2009 இல் பாதுகாப்பு வலயத்தில் குண்டுகளை வீசுவதை மேற்பார்வை செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் மனங்களிலும் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாகும்” என ITJP யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) அமைப்பைச் சேர்ந்தவர்களைப் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல், பாலியல் கொடுமைகள், ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைச் சிறையிலடைத்தமை போன்ற பல நிரூபிக்கத் தக்க குற்றங்கள் ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டிருந்தாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவற்றில் பல சட்ட மீறல்கள் ஷவேந்திர சில்வா நிலை கொண்டிருந்த மாத்தளை முகாமை அண்டி நடைபெற்றிருந்தது என்பதும் அப்போது அவர் கோதபாய ராஜபக்ச கட்டளைத் தளபதியாகவிருந்த கஜபா படைப்பிரிவில் அவர் பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  முன்னாள் அமைச்சர் ராஜித கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *