‘மூப்பில்லாத் தமிழே தாயே’ – ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்த் தாய் வாழ்த்து
‘இசைப் புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் புதிதாக வெளிவந்திருக்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தைம்கிழிசைப் பிரியர்களிடையே பிரபலமாகி வருகிறது.
மாஜ்ஜா என்ற பெயரில் நேற்று (மார்ச் 25) காணொளியாக வெளியாகியிருக்கும் இப் பாடல் பல விதமான சமூக அடையாளங்களையும் கொண்ட தமிழ் பேசும் அனைத்து மக்களினதும் கலை கலாச்சார விழுமியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இசையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாடகிகள் சைந்தவி பிரகாஷ், கதிஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமீனா ராஃபிக், கப்ரியெல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.
தமிழ் மொழியின் பெருமைகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும் காட்சிகளுக்க்கான பாடல் வரிகளை எழுத்தாளர் தாமரை எழுதியிருக்கிறார். அமித் கிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இக்காணொளியை ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிது, பாடகி டீனா மற்றும் ‘ரப்’ பாடகர் அறிவின் குரல்களில் வெளிவந்து பிரபலமான ‘எஞ்சாய் என்ஞாமி’ பாடல் ‘மாஜ்ஜா’ லேபலில் வெளிவந்திருந்தது.