மூதாட்டியை முட்டி வீழ்த்திய காளை

மூதாட்டியை முட்டி வீழ்த்திய காளை

Spread the love

சந்து வழி ஒன்றினால் வந்துகொண்டிருந்த மூதாட்டி ஒருவரை அங்கு நின்றிருந்த காளையொன்று முட்டி வீழ்த்தியதுமல்லாமல், அவரைக் காப்பாற்றச் சென்ற சிறுவனையும் முட்டி வீழ்த்தி, காலினால் இடறித் தாக்கிய சம்பவமொன்று டெல்ஹி, இந்தியாவில் இடம் பெற்றிருக்கிறது.

இச் சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி. காமராவினால் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இக் காணொளி உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கப்படுகிறது.

இச் சம்பவம், புது டில்லியிலிருந்து 87 மைல்கள் தூரத்திலுள்ள மகேந்திரகார் என்னுமிடத்தில் நடைபெற்றிருக்கிறது.

இச் சந்துவழியின் ஒரு பக்கத்தில் காளை நின்றுகொண்டிருப்பதையும், அம் மூதாட்டி காளையைச் சீண்டாது மறுபக்கத்தாற் கடக்க முற்படும்போது மாடு தன்னிச்சையாக அம் மூதாட்டியை முட்டி வீழ்த்துவதையும் இக் காணொளி மூலம் பார்க்க முடிகிறது. இதஹிப் பார்த்த சிறுவன் ஒருவன், அம் மூதாட்டியைக் காப்பாற்ற ஓடிச் செல்லும்போது அதைப் பார்த்துவிட்டு அக்காளை அவனையும் முட்டித் தள்ளுகிறது. அவன் மீண்டும் எழ முயற்சித்தபோது தனது இடது பின் காலால் அவனது தலையில் உதைக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, அயலவர்களின் உதவியுடன் அக் காளை மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் தடுக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email