முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் | கோதபாய ராஜபக்ச -

முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் | கோதபாய ராஜபக்ச

Spread the love

செப்டம்பர் 23, 2019

“எனது வெற்றிக்கு முஸ்லிம்களின் ஆதரவும் பங்களிப்பும் வேண்டும்” என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோதபாய ராஜபக்ச அச் சமூகத்தைக் கேட்டிருக்கிறார். பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி தானே வெற்றி பெறுவேன் என்பதையும் உறுதியாகச் சொல்கிறார்.

இராணுவ பாதுகாப்புடன் சிலாபத்திலுள்ள மசூதி

சிலாபத்தில் உள்ள ஒரு மசூதி ஒன்றில் கூடியிருந்த முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசும்போது, ” இந்த அரசாங்கம் மக்களுக்குப் பாதுகாப்புத் தரத் தவறி விட்டது. சகல சமூகங்களுக்கும் பாதுகாப்பு ஒரு முந்நிபந்தனையாகும்” என அவர் தெரிவித்தார்.

“ச்கல சமூகங்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய நாடொன்றைக் கட்டி எழுப்புவதே என் மனப்பூர்வமான நம்பிக்கையாகும். ஒவ்வொருவரும் பயமின்றி வாழக்கூடியவராக இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படியானால் தான் ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளையும் செய்து கொண்டு தத்தம் மத வழிபாடுகளையும் பின்பற்ற முடியும்” என அவர் மேலும் கூறினார்.

பொய்யான பிரச்சாரங்களுக்கு முஸ்லிம்கள் எடுபட்டுவிடக் கூடாது என்றும் தன்னைப்பற்றி முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள தவறான புரிந்துணர்வினால் தான் கடந்த தேர்தல்களில் அவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  'சப்பிரி கமாக்' திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 28 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு