News & AnalysisSri Lanka

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குத் தடை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உட்பட 27 பேர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது

முல்லைத்தீவு மாவட்டத்தில் முளிவாய்க்கால் நினைவுவார நிகழ்வுகள் எதையும் செய்யக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான்,மல்லாவி, இயங்கன்குளம், முள்ளியவளை ஆகிய இடங்களிலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த முல்லைத்தீவு நீதவான் இத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதே வேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உட்பட, 27 தனி நபர்கள் மீதும் இத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதே வேளை, புதனன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்  தூபி இடிக்கப்பதற்கு கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது ருவிட்டர் செய்தி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.