முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து 12 வருடங்கள் நிறைவேறும் நிலையில், அங்கு கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று ஆரம்பமாகியுள்ளன.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் கோவிட் கட்டுப்பாடுகளை அனுசரித்து தத்தம் அலுவலகங்களில் அமைதி வணக்கங்களைத் தெரிவித்தனர்.

நிறுவுவதற்காகக் கொண்டுவரப்பட்ட நினைவுக் கல்

முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்தக்குழுவைச் சேர்ந்த அருட் தந்தையர்கள்

அதே வேளை, முல்லைத்தீவு பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியின்றி, முள்ளிவாய்க்காலில் எந்தவித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என பொலிசார் அறிவித்துள்ளனர். ஆனால் அங்கு ஒரு நினைவுத் தூபியை நிறுவுவதற்காக முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்தத் குழு தூபிய எடுத்துவந்தது எனவும் அதை இராணுவமும் பொலிசாரும் தடுத்து நிறுத்திவிட்டார்கள் எனவும் அறியப்படுகிறது.

ஆறு அடிகளுக்கு மேலான உயரத்தில் செதுக்கப்பட்ட இந் நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய பதிவுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இத் தூபியை முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற இடத்துக்குக் கொண்டுவந்தபோது அங்கு வந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இந்த ஞாபகார்த்தக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகிய அருட் தந்தை லியோ ஆர்ம்ஸ்ட்றோங் அவர்களை விசாரணை செய்துள்ளனர் என அறிய முடிகிறது. (படங்கள்/ செய்தி மூலம்: தமிழ் கார்டியன்)