முல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு புத்த கோவில் நிர்மாணம்
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த தொன்மையான ஆதிசிவன் கோவிலை இடித்தழித்துவிட்டு அவ்விடத்தில் புத்த கோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திருச்சின்னங்களை நிறுவும் பூஜைகள் ஜூன் 12 அன்று புத்த குருமார்களால் முன்னெடுக்கப்பட்டது.
இப் புத்த கோவில் நிர்மாணத்துக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தும் அதையும் மீறி இந் நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன.
இந் நடவடிக்கைகளுக்கு எதிராக பா.உ. செல்வராஜா கஜேந்திரன் உட்படப் பல தமிழர்கள் திரண்டு தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். இதன் போது பலர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தும் பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இச் சம்பவம் பற்றி ஊடகவியலாளர் கவிந்தன் அவர்களது ருவீட் செய்தியின்படி தமிழர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக புத்தர் சிலை நிறுவும் எண்னம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.





