முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Spread the love
முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது 1

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அங்குள்ள மக்களால் தயாரிக்கப்படும் பண்டங்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் ‘முல்லைத்தீவுத் தயாரிப்புகள்’ (Made in Mullaitivu) என்ற சுலோகத்தின் கீழான முன்னெடுப்பொன்றைக் கனடிய தமிழர் பேரவை இந்த வருடம் அறிவித்திருந்தது.

முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது 2

இதற்கான நிதிசேர் நிகழ்வொன்று ஜூன் மாதம் 27ம் திகதி, ரொறோண்டோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. பல நல்லுள்ளங்கள் இன்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிப்பைச் செய்திருந்தார்கள். கனடிய தமிழர் பேரவையின் இப்படியான முனைப்புக்களுக்கு தாய் நிலத்தில் செயலுருக் கொடுக்கும் வகையில் அங்கு உருவாக்கப்பட்டு, செயற்பட்டுவரும் வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (North East Economic Development Centre (NEED)) முல்லைத்தீவில் இம்முயற்சியை முன்னின்று செயற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது 3

இதன் தொடர்ச்சியாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் முல்லைத்தீவு தொழில்துறைத் திணைக்களத்தின் அனுசரணையோடு, வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (North East Economic Development Centre (NEED)), முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர்த் தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்தும், விற்பனை மற்றும் தகவல் வழங்கும் நிலையமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று (அக்டோபர் 31, 2019) காலை 11:30 மணியளவில் முல்லைத்தீவு நகர மையத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதீக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், கனடிய தமிழர் பேரவையிலிருந்து, இயக்குனர் சபை உறுப்பினர் திரு. வீரசிங்கம் நாகநாதன் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. டான்ரன் துரைராஜா, வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திரு. கந்தையா சுதன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது 4
திருமதி ரூபவதி கேதீஸ்வரன், திரு. Y.K. நாதன், திரு.டான்ரன் துரைராஜா, திரு. வீரசிங்கம் நாகநாதன், திரு. கந்தையா சுதன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் போன்ற விடயங்களில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்குமிடமாகவும், உள்ளூர் உற்பத்திகளை அதன் உடமையாளர்களே முன்னின்று விற்பனை செய்வதற்கு வழிசெய்யும் களமாகவும் இந் நிலையம் வடிவமைக்கப்படவிருக்கிறது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email