முன்னாள் போராளிகளின் புதிய அரசியல் கட்சி உதயம்!

Spread the love
வன்னி, யாழ் மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது

பெப்ரவரி 25, 2020


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அங்கத்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து எதிர்வரும் தேர்தலில் பங்குபற்றுவதற்காகப், புதிய அரசியற் கட்சியொன்றை உருவாக்கியுள்ளனர்.

‘வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம்’ (The Vanni Tamil People Union) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இக் கட்சியில் 13 முன்னாட் போராளிகள் இணைந்துள்ளார்கள் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற பல தொழில் வல்லுனர்களும் இக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து செயற்படும் எந்தவொரு கட்சியும் வன்னி மக்களது அபிவிருத்திக்கு எதையும் செய்யாததால், வன்னி மக்களின் நன்மை கருதி, வன்னியைச் சேர்ந்த இளையோரின் பங்களிப்பில் வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எமது கட்சியின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள்கூடக் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் வட மாகாண அரசியல்வாதிகளோ தமது சுய தேவைகளுக்காவே பணியாற்றுகிறார்கள். அதனால் வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்கிலுள்ள அரசியற் கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப் புதிய கட்சி, யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார்

Leave a Reply

>/center>