Spread the love

‘படைத்தவனின் கட்டளையை ஏற்று மனிதகுலத்துக்குச் சேவையாற்றப் போகிறேன்’

முன்னாள் பொலிவூட் 'பிக் பாஸ்' போட்டியாளர், நடிகை சானா கான் துறவு பூணுகிறார் 1
சானா கான்

முன்னாள் பொலிவூட் ‘பிக் பாஸ்’ போட்டியாளரும், நடிகையுமான சானா கான், பொழுதுபோக்குத் துறையைத் துறந்து மனித குலத்துக்குச் சேவை செய்யத் தயாராகிவிட்டார்.

தனது சமூகவலைத் தளங்களின் மூலம் இச் செய்தியை அவர் அறிவித்திருக்கிறார். “படைத்தவனின் கட்டளையை ஏற்று, நான் மனிதகுலத்துக்குச் சேவையாற்றப் போகிறேன்” என அவர் தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார். இவருக்கு முன்னர், இன்னுமொரு பிரபல பொலிவூட் நடிகையான ஜாய்றா வாசிம் திரையுலகைத் துறந்து மத சேவைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

“இது எனது மிகவும் சந்தோஷமான தருணம். பொழுதுபோக்குத் துறை எனக்கு புகழ், பணம், கெளரவம் எல்லாவற்றையும் தந்தது. “ஒருவர் இந்த உலகத்துக்கு வருவது பணத்துக்கும் புகழுக்குமாகவா” என்ற உணமை, கடந்த சில நாட்களாக என்னைப் பீடித்திருக்கிறது. நாதியற்றவர்களுக்கு உதஹ்வி செய்வது ஒருவரது கடமையில்லையா?. ஒருவர் எத் தருணத்திலும் இறந்து போகலாம். எனது மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என நான் சமீபகாலமாகச் சிந்தித்து வந்தேன். எனவே, இன்று முதல் நான் எனது பொழுதுபோக்கு வாழ்வியலைத் துறந்து படைத்தவனின் சேவைக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்” என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது செய்திக் குறிப்புக்கு 100,000 பேருக்கு மேல் விருப்புக்குறியிட்டுள்ளார்கள்.

சானா கான் பல படங்களில் நடித்திருந்தாலும், சல்மான் கானுடன் இணையாக நடித்த ‘ஜாய் ஹோ’ பிரபலமானது.

Print Friendly, PDF & Email