முத்தையா முரளிதரன் வடமாகாண ஆளுனராக நியமனம்
நவம்பர் 27, 2019

வட மாகாண ஆளுனராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவால் நியமிக்கப்படவுள்ளார்.
ஒன்பது மாகாணங்களில் ஆறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மீதி மூன்றுக்குமான ஆளுனர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர். இவர்களில் வட மாகாணத்திற்கு முரளிதரனும், வட மத்திய மாகாணத்திற்கு பேராசிரியர் திஸவிதாரணவும், கிழக்கு மாகாணத்திற்கு செல்வி அனுராதா யஹம்பத் அவர்களும் நியமிக்கப்படவுள்ளனரென நம்பபப்டுகிறது.
முத்தையா முரளிதரனை, ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் அழைத்து வட மாகாண ஆளுனர் பதவியை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார் எனத் தெரியவருகிறது. அனுராதா யஹம்பத், தேசிய வணிகர் சங்கத்தின் தலைவரும், பிரபலமான ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பணிப்பாளருமாவர். பேராசிரியர் திஸ விதாரண லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும், வைரஸ் நோய்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டவரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமொன்றின் முன்னாள் தலைவருமாவர்.