முத்தையா முரளிதரனாக விஜே சேதுபதி | முரளிதரன் வாழ்வு திரைப்படமாகிறது! -

முத்தையா முரளிதரனாக விஜே சேதுபதி | முரளிதரன் வாழ்வு திரைப்படமாகிறது!

சிறீலங்காவின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரமாகிய சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ்த் திரையின் சமகால நட்சத்திர நாயகனாகிய விஜே சேதுபதி இதில் முரளிதரனின் பாத்திரத்தை எடுக்கிறார்.

‘800’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படம் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் சிறீலங்காவின் இணையற்ற சுழல் பந்து வீச்சாளரும் தனது 18 வருட விளையாட்டுக் காலத்தின்போது  பங்குபற்றிய டெஸ்ட் மாட்சுகளில் 800 விக்கட்டுகளை வீழ்த்திச் சாதனை புரிந்தவருமான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்காலக் கதையைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சிறிலங்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மிகப் பிரமாண்டமான பணச் செலவில் தயாரிக்கப்படவுள்ள இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் டிசம்பர் 2019 இல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

‘சூது கவ்வும்’, ‘விக்ரம் வேதா’ போன்ற வெற்றிப்படங்களின் நாயகனான விஜே சேதுபதி இப்படத்தில் முரளிதரன் பாத்திரத்தை எடுக்க இணங்கியிருக்கிறார். ‘பயோபிக்’ எனப்படும் நிஜமான வாழ்க்கைக் கதைகளைத் திரைப்படமாக்கும் ஒரு புதிய பாங்கு தற்போது திரைப்படத்துறையை ஆட்கொண்டு வருகிறது. ‘800’ திரைபடத்தைப் போலவே இந்திய பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான கபில் தேவ் அவர்களின் கதையும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பிரபல பாலிவூட் நடிகரான ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவியான தீபிகா படுகோனி யும் இப் படத்தில் நடிக்கிறார்கள்.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கமல் ஹாசனுக்கு 65 வயது: பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)