முதல் குரங்கு தமிழ்க் குரங்கு
இந்தியாவின் ஆதிக்குடிகள் தமிழர்?
மாயமான்
“முதல் குரங்கு தமிழ்க் குரங்கு” என்று புதுமைப்பித்தன் கிண்டாடித்தது உண்மையாகிவிட்டது என்ற தலைப்போடு எனது முகநூலில் ஒரு பதிவு வந்து குதித்தது. அதாவது ஆபிரிக்காவில் சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனத்தின் வழித்தோன்றலான மதுரையைச் சேர்ந்த விருமாண்டி தேவர் அவர்களின் மரபணுவை ஆராய்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக விஞ்ஞானியான பச்சப்பன் இதை உறுதி செய்துள்ளாரென இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது பற்றி உண்மை அறியும் சட்டத்தின் கீழ் கூகிள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தேன். விடயம் உண்மையென அது தீர்ப்பளித்திருந்தது. அக்கதையைச் சோடித்து இங்கே வழங்கி கொஞ்ச் ‘லைக்ஸ்’ எடுக்கலாமென யோசித்தேன்.
ஒருவருடைய குலம், கோத்திரம் போன்றவற்றை அறிய அவரது மரபணுவை ஆராய்வது வழக்கம். ஆபிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனத்தின் பரம்பலை அறிய விஞ்ஞானிகள் இம்முறையைப் பயன்படுத்துகிறார்கள். தற்போது இது வியாபாரமாக்கபாட்டுவிட்டதுமல்லாமல் குழந்தைகளின் மரபணுவை ஆராய்ந்து குடும்பங்களைப் பிரிக்கும் தொழிலாகவும் மாறிவிட்டது துயரம்.
உயிரினத்தின் கருவில் குடிகொண்டிருக்கும் நிறமூர்த்தங்களில் அடுக்கிவைக்கப்ட்டிருக்கும் மரபணுக்கள் இரண்டு விதமான இயல்புகளைக் காட்டுகின்றன. தந்தையின் குணாதிசயத்தை மட்டும் காட்டி நிற்கும் Y நிற்மூர்த்தங்கள் ஆண் மக்களுக்கு மட்டுமே கடத்தப்படுகின்றன. அதற்காக ஆணாதிக்கம் ‘அப்பவே தொடங்கீட்டுது’ என ஆரவாரம் கொள்ளத் தேவையில்லை. தாய் தான் ஆதி பரா-சக்தி என்பதை நிறுவ படைப்பு வேறுவழிகளை வைத்திருக்கிறது.
மனித கலங்களில் கரு (nucleus) சவ்வினால் பாதுகாக்கப்பட்ட தனி உறுப்பு. இங்குதான் நிறமூர்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கிந்றன. ஆனால் இதற்கு வெளியே இன்னுமொரு தனி உறுப்பாக இருக்கிறது மைட்டோகொன்றியா (mitichondria). இது தான் நான் சொன்ன ஆதி பரா-சக்தி. உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை இதுதான் பிறப்பிக்கிறது. இச்சக்தியை வைத்துக்கொண்டுதான் உடல் (நடராஜர்) தன் நிரந்தர ஆட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். சக்தி இல்லாமல் சிவனில்லை என்பதன் விஞ்ஞான விளக்கம் இதுதான்.
இந்த மைட்டோகொண்ட்றியாவில் இருக்கும் மரபணு தனித்தன்மையானது. Y- நிறமூர்த்தங்களைப் போலல்லாது இது தனது குணவியல்புகளை தனது ஆண், பெண் இரு பாலாருக்கும் சந்ததி, சந்ததியாகக் கடத்த உதவுகிறது. எனவே ஒருவரின் குலம் கோத்திரம் ஆகியவற்றை அறிய விஞ்ஞானிகள் மைட்றோகொண்ட்றியல் மரபணுவையே (mtDNA) பயன்படுத்துகிறார்கள். இதன்படி நமது விருமாண்டி தேவரின் மரபணுவில் M130 என்னும் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானி பச்சப்பன் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். தந்தையிடமிருந்து பெறப்படும் y மரபணுக்கள் போலல்லாது தாயிலிருந்து பெறப்படும் மரபணுக்கள் அதிக குண்வியல் மாற்றங்களுக்குட்படுவதில்லை என்பதனால் குலத் தொடர்புகளை அறிவதற்காக தாய்வழி மரபணுக்களே பாவிக்கப்படுகின்றன.
இதன் மூலம் அவர் நிரூபித்திருப்பது என்னவென்றால் இம்மரபணுவின் மூலம் சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்காவில் வாழ்ந்த ஆதிக்குடிகளிடம் காணப்படும் மரபணு அங்கமும் இதுவேதான். அது மட்டுமல்ல விருமாண்டி தேவரின் கிராமத்தில் வாழும் பலரும் M130 மரபணுவையே கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இருளர், கள்ளர் சமூகங்களும், மேற்கு தொடர்ச்சி மலையை அண்டிய ஜோதிமாணிக்கம் கிராமத்தவர் ஆகியோரில் இம்மரபணு பரவலாகக் காணப்படுகிறது. M130 மரபணுவின் உபகூறுகள் போன்றவற்றை ஆராய்ந்தபோது இந்தியாவின் வடக்கிலும், வங்காளத்திலும், குஜராத்திலும் காணப்படுவதாக கூகிளார் கூறுகிறார்.
எனவே தமிழகத்தின் எல்லை வடவேங்கடம் இல்லை இந்தியா முழுவதும் தமிழருடையது என விருமாண்டி தேவர் சாட்சியை வைத்து கூகிளாண்டவர் தீர்ப்பு வழங்குகிறார். அப்பீல்? வாய்ப்பேபில்லை ராஜா!
