முதலாவது ரொறொன்ரொ – யாழ் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு
கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ரொறொன்ரோ மாநகர சபை முதல்வருக்கும், யாழ் மாநகர சபை முதல்வருக்கும் இடையில் இரு நேரடி சந்திப்புகளை கண்டிய தமிழர் பேரவை எற்படுத்தியிருந்தது.
இத் திட்டத்தை முன்னெடுப்பதில் ரொறொன்ரொ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மெக்கெல்வியின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.
இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக முதலாவது ரொறொன்ரொ – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு, இன்று செவ்வாய் 25ம் திகதி இரவு 8:30 மணிக்கு (ரொறொன்ரோ நேரம்) நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் ரொறொன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள்.
இந் நிகழ்வு ரொறொன்ரோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மெக்கெல்வியின் ஆதரவில் நடைபெறவுள்ளது. அனைவரும் உங்கள் வீட்டில் இருந்தவாறே இணைய வசதியூடாக இந் நிகழ்வைக் கண்டுகளிக்க எங்களோடு ஒன்றிணையுங்கள் !
Watch the event LIVE on:
Canadian Tamil Congress YouTube
Canadian Tamil Congress Facebook