Spread the love

Fortune Global 500 பட்டியலில் 96 வது இடத்தைப் பெறும் இந்திய நிறுவனம்

முகேஷ் அம்பானியின் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் நிறுவனத்தின் இன்றய பெறுமதி $200 பில்லியன் என மதிப்பிடப்படுகிறது. இந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் முதலாவது இந்திய நிறுவனம் என்ற பெருமையும் அதற்குக் கிடைக்கிறது.

மும்பாயில் தலைமயலுவலகத்தைக் கொண்ட றிலையனஸ் இண்டஸ்றீஸ் லிமிட்டட் (Reliance Industries Limited (RIL)) என்ற பெயரில் இயங்கும்

இப் பல்தேசிய இந்திய நிறுவனம் எரிபொருள், பெற்றோகெமிக்கல், ஆடையணி, இயற்கை வளங்கள், சில்லறை வியாபாரம், தொலைத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வியாபாரங்களில் ஈடுபாட்டு வருகிறது.

இந் நிறுவனம் 1960 இல் திருபாய் அம்பானி மற்றும் சம்பக்லால் தமானி ஆகியோரால் றிலையன்ஸ் கொமேர்ஷல் கோர்ப்பரேஷன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1965 இல் இரு பங்குதாரரும் பிரிந்து சென்று 1966 இல் அம்பானியினால், றிலையன்ஸ் ரெக்ஸ்ரைல் எஞ்சினியர்ஸ் பிறைவேட் லிமிட்டட் என்ற பெயரில் செயற்கை ஆடை தயாரிக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. 1973 இல் அதன் பெயர் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் என மாற்றப்பட்டது. 1977 இல் அது பங்குச் சந்தையில் பிரவேசித்தது (IPO). இன்று இந்தியாவில் இயங்கும் அதி பெரிய பங்குச் சந்தைப் பெறுமதியைக் கொண்ட நிறுவனமாக அது விளங்குகிறது. Fortune Global 500 தரப்படுத்தலில் இந் நிறுவனம் உலகில் 96 வது இடத்தை வகிக்கிறது. அம்பானி குடும்பம் இந் நிறுவனத்தின் 46.32% பங்குகளை வைத்திருக்கிறது. மீதி பங்குச் சந்தையின் மூலம் விற்கப்பட்டுள்ளது.

அமசோன், KKR போன்ற நிறுவனங்கள் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் இன் சில்லறை வியாபாரப் பிரிவில் முதலீடு செய்யவிருக்கின்றன என்ற செய்தி பரவியதும் இன்று (வியாழன் 10) றிலையன்ஸின் பங்குச் சந்தைப் பெறுமதி 7% அதிகரித்தது. இதனால் அந் நிறுவனத்தின் பெறுமதி தற்போது $200 பில்லியனாக (ரூ 7,500 கோடி) உயர்ந்துள்ளது.



இன்று அமசோன் நிறுவனம், றிலையன்ஸ் இண்டஸ்றீஸின் சில்லறை வர்த்தக றிலையன்ஸ் றீரெயில் (Reliance Retail) பிரிவில் 40% த்தை $20 பில்லியனுக்கு வாங்குவதென முடிவெடுத்தது. அதே வேளை உலக முதலீட்டு நிறுவனமான KKR றிலையன்ஸ் சில்லறைப் பிரிவில் $5 பில்லியனை முதலீடு செய்கிறது. இச் செய்திகளால் றிலையன்ஸ் பங்குகளின் பெறுமதி இன்று திடீரென உயர்ந்துவிட்டது.

றிலையன்ஸ் றீரெயில், BigBazaar, FBB, FoodHall உள்ளிட்ட 12,000 சில்லறை வர்த்தக நிலையங்களை வைத்திருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  'நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' - ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
முகேஷ் அம்பானியின் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் நிறுவனத்தின் பெறுமதி $200 பில்லியன்!
முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் றிலையன்ஸ் இண்டஸ்றீஸ் நிறுவனத்தின் பெறுமதி $200 பில்லியன்!