Spread the love

முகக்கவசம் வைரஸ் தொற்றைத் தடுக்குமா?

முகக் கவசம் அணிவதனால் நோய்த் தொற்று முற்றாகத் தடுக்கப்படுமெனக் கூறமுடியாது. வைரஸ்கள் கண்களினால்கூட உடலுள் புகமுடியும். சில நுண்ணிய வைரஸ் துணிக்கைகள் முகக்கவசங்களின் துவாரங்களினூடும் சென்றுவிடக்கூடியன. ஆனாலும் முகக் கவசங்கள், பிறரின் தும்மல் அல்லது இருமலின்போது பரவலாகும் நீர் / சளித் துணிக்கைகளைத் தடுப்பதில் வல்லன. பெரும்பாலான வைரஸ் தொற்று இப்படியான துணிக்கைகளினாலேயே நடைபெறுவதால் முகக்கவசம் அணிவது எப்போதும் பாதுகாப்பானது.

நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு அருகில் போகின்றவர்களுக்கு இது நிச்சயம் பாதுகாப்பைக் கொடுக்கும். நோய்த்தொற்று இருக்கிறது என அடையாலம் காணப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவதால் மற்றவர்களைப் பாதுகாக்கலாம்.

முன்னணி சுகாதார சேவைகளை வழங்கும் பணியாளர்கள் எப்போதுமே முக்ககவசங்களை அணிவது அவர்களுக்குப் பாதுகாப்பானது.

குடும்ப உறவினர்கள் தங்கள் பாதிக்கப்பட்ட உறவுகளைப் பராமரிக்க நேர்ந்தால் இரு தரப்பும் முகக்கவசம் அணிவது பாதுகாப்பைத் தரும்.


வெளியில் சாதாரணமாக உலா வரும்போது முகக்கவசம் அணிவது அதிகரித்த பாதுகாப்பைத் தருமென்பதற்கில்லை.

முகவாய்க் கவசங்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றன. ஒன்று சமூகப் பாவனை, மற்றது மருத்துவப் பாவனை.

சுகதேகிகள் முகவாய்க் கவசங்கள் வாங்குவதை அமெரிக்க சேர்ஜெண்ட் ஜெனெரல் நிராகரிக்கிறார். மருத்துவப் பாவனைக்கு கவசங்கள் போதாமை காரணமாக அவர் இதைக் கூறினாலும், முகவாய்க் கவசங்கள் சமூகப் பாவனையின்போது கொறோனாவைரசுக்கு எதிராக எதிர்பார்த்தளவு பாதுகாப்பைத் தருவதில்லை என்பது பொதுவான கணிப்பு.

நீங்கள் சுகதேகியாக இருந்தால் நோய்த் தொற்றாளரைப் பராமரிக்கவேண்டி நேர்ந்தால் மட்டுமே கவசங்களைப் பாவிப்பது நல்லது.

சன நெரிசல் கூடிய இடங்களில் பணி புரிபவர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர், மருத்துவமனை ஊழியர், தனிமைப்படுத்தப்பட்டவர்களைப் பராமரிக்கும் பணியாளர் / உறவினர், காவற்துறையினர், பாதுகாப்புப் பணியாளர், பொதி விநியோகிஸ்தர் போன்றோர் முகவாய்க் கவசங்களை அணிவது அவசியமானது.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | நாய்களைக் கொண்டு நோயை முகர்ந்தறிய ஆராய்ச்சி!