மீண்டும் ஆரம்பமாகியது அரகாலயா
‘நிராயுத நிர்பக்ஷித அரகாலயா – மக்கள் புரட்சி’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஆகஸ்ட் 11) கொழும்பு மாநகரசபையின் முன்னால் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா உடபடப் பல பிரமுகர்களும் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மீதான மக்களின் பலவிதமான எண்ணக்கிடக்கைகளையும் வெளிப்படுத்தும் வகையான பதாகைகளுடன் பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். (Image credit:readphotos.com)



