மிஷேல் ஒபாமா | உலகில் அதிகம் புகழப்படும் பெண்!

Spread the love

டிசம்பர் 31, 2019

உலகில் அதிகம் புகழப்படும் பெண்மணியாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் துணைவியார் மிஷேல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருத்துக்கணிப்பொன்று சொல்கிறது.

‘கல்லப்’ நிறுவனம் நடத்தும் வருடாந்த கருத்துக் கணிப்பில் தற்போதய ஜனாதிபதி ட்றம்பின் மனைவியை விட அதிக வாக்குகளைப் பெற்று மிஷேல் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை மாளிகையில் வசித்தபோது அவரது கணவன் பராக் ஒபாமாவை விட எப்போதும் முன்னணியில் இவர் இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

On the key to a successful marriage

மிஷேல் ஒபாமாவுக்கு இந்தக் கெளரவம் இது இராண்டவது வருடம், தொடர்ச்சியாகக், கிடைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் மெலானியா ட்றம்ப் இருக்கிறார். ஹிலாரி கிளிண்டன், ஓப்றா வின்ஃப்றி, கிரேட்டா துண்பேர்க் ஆகியோர் இவர்களைத் தொடர்கிறார்கள்.


கடந்த ஜூலை மாதம் ‘யூகவ்’ எடுத்த கருத்துக்கணிப்பின்படி, உலகளாவிய ரீதியிலும் அதிகம் புகழப்படும் பெண்ணாக மிஷேல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதன் போது இங்கிலாந்தின் மகாராணி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

‘கலப்’ கருத்துக்கணிப்பின் அதிகம் புகழப்படும் ஆண்களில், டொனால்ட் ட்றம்ப் முதலாவதாகவும் பராக் ஒபாமா இரண்டாவதாகவும் தெரியப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 12 வருடங்களாக பராக் ஒபாமா முதலாவது இடத்தீல் இருந்திருந்தாலும் இந்த வருடம் முதல் தடவையாக ட்றம்ப் முன்னணிக்கு வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களைவிட இந்த வருடம் ட்றம்ப் முன்னணிக்கு வந்துள்ளார்.

1948 இலிருந்து ‘கலப்’ நிறுவனம் இக் கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>