மின்வெட்டைப் பயன்படுத்தி காணி ஆவணங்கள் அகற்றல் – இலங்கை அரசின் புதிய யுக்தி

யாழ். கச்சேரியிலிருந்து காணி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு மாற்றம்

மின்வெட்டைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து காணி சம்பந்தப்பட்ட ஏராளமான ஆவணங்களை அரசாங்கம் அனுராதபுரத்திற்கு மாற்றியிருக்கிறது என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளர்.

காணி மறுசீரமைப்பு தொடர்பான ஆவணங்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணக் கச்சேரியிலேயே வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன எனவும் அரசாங்கம் இவற்றை வடமத்திய மாகாணத்துக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறது என ஒரு மாதத்திற்கு முன்னராகவே தான் எச்சரித்திருந்ததாகவும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் செறிவைக் குறைப்பத்தற்கு அரசாங்கம் திடாமிட்ட முறையில் செயற்பட்டு வருகிறது. மியன்மாரில் (பர்மா) வாழும் சிறுபான்மை இனக்குழுமங்களின் பலத்தைக் குறைப்பதற்காக அப்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர் மேற்கொண்டதைப் போன்று இலங்கையிலும் மேற்கொள்ளவேண்டுமெந்பது தற்போதய அரசாங்கத்தின் திட்டமாகும். இதற்காகவே இம் மாகாணங்களிலுள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களையும், பாவனையற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களையும் சுவீகரித்து சிங்கள மக்களைக் குடியேற்ற இவ்வரசு திட்டமிட்டுச் செயலார்றி வருகிறது.

இதே வேளை, யாழ்ப்பாணம், கண்டி போன்ற பிரதேசங்களைப் பாதுகாத்துவந்த தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம் ஆகியவற்றை அகர்றிவிட்டு இலங்கை முழுவதற்கும் ஒரே சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நீதியமைச்சர் அலி சப்றி தயாராகி வருகிறார். இதுவெல்லாம் இந்த பரந்த சிங்களமயமாக்கலின் கூறுகளாகவே பார்க்கப்படவேண்டும்.

யாழ் கச்சேரியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் இரவோடு இரவாக, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் மாற்றப்பட்டதன் பின்னணியில் அரசாங்கத்தின் இப் பெருந்திட்டம் இருக்கிறதோவென்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாததாகிறது.

வடக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் இதுபற்றிய எதிர்ப்பு எதையும் தெரிவித்ததாக இதுவரை தெரியவில்லை.