மின்வாகனங்கள் உறை வெப்பநிலைக்குக்கீழே 30% பயணத் தூரத்தை இழக்கின்றன

உறைநிலைக்குக் கீழான வெப்பநிலைப் பிரதேசங்களில் மின்வாகனங்கள் அவை குறிப்பிட்ட அளவு பயணத் தூரத்தை முழுமையாக எட்ட்டமுடியாது போகின்றது. சராசரியாக 30% பயணத்தூரத்தை அவை இழந்துவிடுகின்றன என அமெரிக்க நிறுவனமொன்று செய்த ஆய்வின் மூல்ம் தெரியவந்துள்ளது. சியாட்டிலைத் தளமாகக் கொண்ட றிகறண்ட் (Recurrent) என்னும் நிறுவனம் 7000 மின்வாகனங்களை -1 பாகை C முதல் -7 பாகை C வரையிலான வெப்பநிலைகளில் ஆய்வுக்குட்படுத்தியிருந்தது.

எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் அவற்றின் இயந்திரம் வெளியிடும் வெப்பத்தினால் வாகனங்களின் உட்பகுதியை வெப்பமாக்கி சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் சொகுசுவாக அமைந்துவிடுகின்றன. ஆனால் மின்வாகனங்களில் சூடாகும் இயந்திரப்பாகங்கள் குறைவு. மோட்டார் இயங்கும்போது மட்டுமே வெப்பத்தை வெளிவிடுகிறது. இதனால் வாகனங்களின் உட்பகுதியைச் சூடாக்க மின்கலத்திலிருந்து சக்தி எடுக்கப்பட்டுவிடுகிறது. மீதமுள்ள சக்தி வாகனத்தின் பயணத் தூரத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என றிகறண்ட் ஆய்வாளார் லிஸ் நாஜ்மான் கூறுகிறார்.

A chart with blue and yellow lines to demonstrate electric vehicle range in warm and cold temperatures.
Seattle-based Recurrent measured range loss in 7,000 EVs at temperatures between -7 C and -1 C. (Submitted by Recurrent)

உறைநிலைக்குக் கீழான வெப்பநிலைகளில் மிக நீண்டதூரம் செல்ல விரும்புபவர்கள் அப்பிரதேசங்களில் மின்னேற்றிகள் (charging towers) இல்லாதபோது மிகவும் சிரமப்படவேண்டி நேரிடுகிறது. குறிப்பாக ஒன்ராறியோ மாகாணத்தில் சட்பெரிக்கு வடக்கே மின்னேற்றிகளைக் காண்பதே அபூர்வம்.

வாகனங்களை முன்கூட்டியே வெப்பப்படுத்துவதன் மூலம் 10% முன்னேற்ரத்தைக் காணமுடியும். (Photo by Andreas Dress on Unsplash)