• Post category:CANADA
  • Post published:July 29, 2020
Spread the love

யோர்க் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று மார்க்கம் நகரில் அமையவிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பைத் தெரிவிக்கும் நிகழ்வு, மார்க்கம் பான் ஆம் மையத்தில் (PanAm Centre) ல் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டினால், கடந்த வெள்ளியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்கம் நகரில் அமையவிருக்கும் முதலாவது பல்கலைக்கழக வளாகம் இதுவாகும்.

C:\Users\lavanya.amirthamshan\AppData\Local\Packages\Microsoft.MicrosoftEdge_8wekyb3d8bbwe\TempState\Downloads\wetransfer-158192 (1)\IMG_3189.jpg

இது பற்றி மார்க்கம் – தோர்ண்ஹில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர லோகன் கணபதி கருத்துத் தெரிவிக்கையில், “யோர்க் பிராந்திய, மார்க்கம் நகர பிரதேசம் வாழ் மக்களுக்கு இவ்வறிவிப்பு ஒரு முக்கிய திருப்புமுனையானதாகும். எனது கவுன்சிலர் நாட்களிலில் இருந்தே இத் திட்டத்தை நிறைவேற்றுக் குழுவில் அங்கத்தவராயிருந்து பணிபுரிந்துள்ளேன். எமது கடின உழைப்பு இப்போது பலன் தருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

புதிய வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் இம் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. யோர்க் பிராந்தியத்தின் கோவிட்-19 இற்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 இலையுதிர் காலத்தில் பாவனைக்காகத் திறக்கப்படவிருக்கும் இவ் வளாகம், யோர்க் பிராந்தியத்தில் 350 மில்லியன் டாலர்கள் பெறுமதியான பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் அதே வேளை, 2,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குமெனக் கூறப்படுகிறது.

தொழில்நுட்பம், வர்த்தகம், தரவு அறிவியல், தொழில் முனைவோர் ஆகிய துறைகளில் இளங்கலை மற்றும் பட்டதாரி மட்டங்களில் கற்கை நெறிகள் இவ் வளாகத்தில் வழங்கப்படும்.



400,000 சதுர அடி பரப்பளவில் அமையவிருக்கும் இவ் வளாகத்தில் 4,200 மாணவர்கள் கல்வி பயில வசதிகள் செய்து கொடுக்கப்படும். முற்றாகச் செயற்படும்போது, இவ் வளாகத்தினால் மாகாண அரசுக்கு ஆண்டொன்றுக்கு 54 மில்லியன் வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வளாகத்தின் வருகையால், மார்க்கம் நகர மக்கள், வணிக சமூகம் எனப் பலரும் பயன்பெறக்கூடியதாகவிருக்கும் என்பதோடு, சகலரதும் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்களிப்பை வழங்கும் எனக் கருதப்படுகிறது.

“யோர்க் பிராந்தியம் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசமாகையால் இவ் வளாகத்தின் வருகையால் எங்கள் சமூகமும் நிறைந்த பலன்களைப் பெறும் எனத் துணிந்து கூறமுடியும்” என்று மெளும் தெரிவித்தார் திரு லோகன் கணபதி.

Print Friendly, PDF & Email