HealthInternational Medical Health Org. (IMHO)Sri Lanka

மாணவர்களுக்கான மஸ்கேலியாவின் முதற் பற்சிகிச்சை நிலையம் – அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) திறந்து வைப்பு


நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கேலியா நகரின் மாணவர்களின் பற் சுகாதாரத்தைப் பேணும் முகமாக, அமெரிக்காவைத் தலைமயகமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (International Medical Health Organization – IMHO USA)) மஸ்கேலியாவின் முதல் பற் சிகிச்சை நிலையமொன்றை அமைத்திருக்கிறது.

$60,000 அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந் நிலையம் இந் நகரிலுள்ள 57 பாடசாலைகளில் கல்வி கற்கும் 12,000 மாணவர்களின் பற் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையத்தின் சம்பிரதாய திறப்பு நிகழ்வில் சுகாதார சேவைகள் பிரதேசப் பணிப்பாளர் டாக்டர் இமேஷ் பிரதாபசிங்க, பிரதேச பல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிரிஷாந்த உடவல, மஸ்கேலிய சுகாதார அதிகாரி டாக்டர் டி. சந்திர ராஜன், பிரதேச சபைக்கான தொண்டு நிறுவன இணப்பாளர் திருமதி மோகனராணி, பற் சிகிச்சையாளர் திருமதி சங்கா, மஸ்கேலியா புனித ஜோசஃப் கல்லூரித் தலைமை ஆசிரியர், இதர ஆசிரியர்கள், சமாதான நீதவான் கந்தையா விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.