Spread the love

இறைச்சி இறக்குமதி தொடரும்

செப்டம்பர் 08, 2020: மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டுவரப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நடைபெற்ற அவரது கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அறிவித்தார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணரத்னா இது தொடர்பாக தெரிவிக்கையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு கூட்டத்தில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், ஆனாலும், இறைச்சி உண்பவர்களுக்கு வசதியாக, இறைச்சி இறக்குமதி தடை செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

“அநகாரிக தர்மபால காலத்தில் இருந்தே மாடுகளைக் கொலை செய்வது தடை செய்யப்படவேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும், எந்த அரசாங்கமும் இதைச் சட்டமாக்க முன்வரவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

புத்த சாசனம், மத, கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச இம் முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை | 20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் - 19 இல் பாரிய மாற்றங்கள்
மாடுகள் கொல்லப்படுவதற்கு விரைவில் தடை- மஹிந்த ராஜபக்ச

மாடுகள் கொல்லப்படுவதற்கு விரைவில் தடை- மஹிந்த ராஜபக்ச