IndiaNews & AnalysisSri Lanka

மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் – இந்தியா

இலங்கைத் தமிழரின் தேவைகளும், பாதுகாப்பும் முற்றாகப் பாதுகாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன எனவும், இவ்விடயத்திற்கு இந்தியா அதி முக்கியத்துவத்திக் கொடுத்து வருகிறது

இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கர்

விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி அதிகாரப் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை காப்பாற்றவேண்டுமென சர்வதேசங்கள் விடுக்கும் அறைகூவலுக்கு நாமும் ஆதரவளிக்கிறோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் பிரகாரம் சகல மாகாணசபைகளும் செயற்படுவதற்கு இது வழிவகுக்கும் என அ.இ.அ.தி.மு.க. வின் மேல்சபை பாராளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதத்துரைக்கு கடிதமொன்றின் மூலம் பதிலளிக்கையில் டாக்டர் ஜெயசங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேறிய தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கடந்த மாதம் உறுப்பினர் தம்பித்துரை மேல்சபையில் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைகள் சபையில் இந்தியா வாக்களிக்காது நடுநிலைமையைப் பேணியிருந்தாலும், வாக்கெடுப்பின் முன்னர் அது சம்பந்தமாக இந்தியா தெரிவித்த கருத்தின்போது “இலங்கைத் தமிழர்களது நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் கண்ணியம் தொடர்பான அபிலாட்சைகளைப் பேணுவோமென்ற வாக்குறுதியை இந்தியா மீளவும் வலியுறுத்துவதாக” கூறியிருந்தது. அத்தோடு, நல்லிணக்க முயற்சிகளைத் தொடருமாறும், தமிழ் மக்களின் அபில்லட்சைகளை நிறைவேற்றி வைப்பதற்காக சரவதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும்படியும் இந்தியா வற்புறுத்தியிருந்தது என டாக்டர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள சபையின் வாக்கெடுப்பின்போது இந்தியா சகல அங்கத்துவ நாடுகளோடும் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்தது எனதும், தமது நிலை தொடர்பாக பெப்ரவரி 25 அன்று எடுக்கப்பட்ட வாக்கெடுப்பன்று உறுதியான கருத்துக்களை முனவைதிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழரின் தேவைகளும், பாதுகாப்பும் முற்றாகப் பாதுகாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன எனவும், இவ்விடயத்திற்கு இந்தியா அதி முக்கியத்துவத்திக் கொடுத்து வருகிறது” என உறுப்பினர் தம்பித்துரைக்கு அமைச்சர் ஜெயசங்கர் உறுதியளித்துள்ளார்.