NewsSri Lanka

மாகாணசபைத் தேர்தலை நடத்த சட்டத்தில் இடமில்லை – உச்ச நீதிமன்றம்

செப்டம்பர் 2, 2019

தற்போதைய சட்டத்திற்கிணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாது என சிறீலங்காவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியுமா என்று ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்ததற்கு அமைய நீதிமன்றம் தனது கருத்தைக் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு இம் முடிவை எடுத்திருந்தது.