Spread the love

சஜித் பிரேமதாசாவுக்குக் குழந்தையில்லை என்பதை மஹிந்த ஏளனம் செய்தார்

ஜூலை 24, 2020 : சமாஜி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமாதாசாவுக்குக் குழந்தை இல்லை என்பதை தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் எள்ளலாகப் பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது.

இந்த நாட்டில் திருமணமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணிடம் பலரும் கேட்கும் கேள்வி “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்” என்பது; திருமணம் முடிந்ததும் அவளிடம் கேட்கப்படும் கேள்வி “எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாய்” என்பது; இரண்டு, மூந்று வருடங்களுக்குள் அது நடைபெறாவிட்டால் ” ஏன் நீ இன்னும் பிள்ளையைப் பெறவில்லை” என்பது. இப்படியாகப் பெண்களே எப்போதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

ஹிருணிகா பிரேமச்சந்திரா

சமாஜி ஜன பலவேகய கட்சியின் பெண்கள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது “சஜித் பிரேமதாச மீதான ராஜபக்சவின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குழந்தைகளைப் பெறமுடியாது அல்லலுறும் அத்தனை பெண்களையும் அவமதிப்பதற்கு ஒப்பானது” என ச.ஜ.ப. கட்சியின் வேட்பாளராகிய ஹிருணிகா பிரேமச்சந்திரா தெரிவித்தார்.

“இந்த நாட்டில் திருமணமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணிடம் பலரும் கேட்கும் கேள்வி “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்” என்பது; திருமணம் முடிந்ததும் அவளிடம் கேட்கப்படும் கேள்வி “எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாய்” என்பது; இரண்டு, மூந்று வருடங்களுக்குள் அது நடைபெறாவிட்டால் ” ஏன் நீ இன்னும் பிள்ளையைப் பெறவில்லை” என்பது. இப்படியாகப் பெண்களே எப்போதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மஹிந்த ராஜபக்சவின் இப் பேச்சை இந் நாட்டின் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் தட்டிக் கேட்கவேண்டும்” எனத் தெரிவித்தார் பிரேமச்சந்திரா.

Print Friendly, PDF & Email
Related:  மிருசுவில் கொலையாளியின் பொதுமன்னிப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு!