மஹிந்த – மைத்திரியிடையே இணக்கப்பாடு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவிற்குமிடையே  ஜனாதிபதி தேர்தல் விடயமாக இன்று தனிப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் சிறீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே தேர்தல் விடயத்தில் கூட்டணியொன்று அமைவதற்கான சாத்தியமுள்ளதெனத் தெரிகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 11) சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாடு நடக்கவிருக்கிறது. இதில் கட்சியின் தலைமையை மஹிந்த எடுக்கவிருப்பதாகவும் கோதபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பாரென அறிவிக்கப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.