Spread the love

ஜனவரி 26, 2020


மஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது - நாமல் குற்றச்சாட்டு! 1
நாமல் ராஜபக்ச பா.உ.

“தமது வாக்காளர்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்ற அச்சத்தில், மஹிந்த – கோதாபய ராஜபக்சக்களுக்கிடையில் பகை உண்டாகியிருக்கிறது என ஐ.தே.க. தலைவர்கள் பொய்யான தகவல்களை அவிழ்த்துவிட்டு அவர்களைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்” என பொதுஜன பெரமுன பா.உ. நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அவர்கள் இப்பொழுது கோதாபய ராஜபக்ச நல்லவர் எனவும், மஹிந்த ராஜபக்ச நல்லவரல்ல எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது அவர்கள் கோதாபய நல்லவரல்ல எனவும், மகிந்த நல்லவர் எனவும் கூறிவந்தார்கள். கோதாபய அமெரிக்க கடவுச் சீட்டை வைத்திருக்கிறார் என்று சொல்லி வந்த சஜித் பிரேமதாச இப்போது அப்படிச் சொல்வதில்லை, ஏன்? கோதாபயவுடன் இணைந்து பணிபுரியத் தயார் என அவர் இப்போது சொல்கிறார். ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் அடுத்த தேர்தலின்போது, வாக்களிப்பு நிலையங்களுக்கு வரமாட்டார்கள் என இப்போது அவர்களுக்குத் தெரிகிறது. இது தான் உண்மை”

“கோதாபய ராஜபக்ச அடுத்த நான்கரை வருடங்களுக்கு ஜனாதிபதியானால், அக்காலகட்டத்தில் அரசாங்கம் அமைக்கப்படும்போது மஹிந்த ராஜபக்சதான் பிரதமர். இதனால் தான் ஐ.தே.கட்சியினர் கோதாவுக்கும் மகிந்தவுக்குமிடையில் உரசல் எனக் கதையைக் கட்டி விடுகிறார்கள். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். மகிந்தவையும், கோதாவையும் பிரிப்பது அவ்வளவு சுலபமல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறீலங்கா பொதுஜன பெரமுன தொகுதிக் கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது நாமல் ராஜபக்ச இப்படிப் பேசியுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  நியூ யோர்க் ஐ.நா. தலைமையகத்தின் முன் நாடுகடந்த தமிழீழ அரசு ஆர்ப்பாட்டம்!
மஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு!

மஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு!