ஹைதராபாத் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பை உதாரணம் காட்டுகிறார் ஜனதா .தாள் (எஸ்) தேசிய செயலர்

மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 39,27,882 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 17 இலட்சம் தலித்துகள் மற்றும் 10 இலட்சம் முஸ்லிம்கள் என்றும் ஜனதா தாள் (எஸ்) செயலாளரம் முன்னாள் நீதிபதியுமான பி.ஜி. கோல்ஸே பட்டில் கூறியுள்ளார். இது பா.ஜ.கட்சியினால் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பம்பாய் உயர் நீதிமன்ற இளைப்பாறிய நீதிபதி கோஸ்லே மேலும் கூறினார்.

Photo Credit: Swarajya.com

பட்டியலிலிருந்து ‘காணாமற்போன வாக்காளர்’ களைக் (Missing Voter App) கண்டுபிடிப்பதற்கென மென்பொருள் ஒன்றை உருவாக்கிய தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் காலிட் சாயபுல்லா என்பவர் தன் மென்பொருளைப் பிரயோகித்து இக் கணக்கெடுப்பை நடத்தியிருந்தார். அவரது ஆய்வின்படி வாக்காளர்களில் 12.7 கோடி பெயர்கள் பட்டியலிலிருந்து காணாமற் போயுள்ளன என்றும் அதில் 3 கோடி பெயர்கள் முஸ்லிம்களுடையது எனத் தெரியவருகிறது.

மஹாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் 69 ஐ சாய்புல்லாவின் நிறுவனமான ரேய் லாப்ஸ் (RayLabs) ஆய்வு செய்திருந்தது.

இத் தவறுகளைத் திருத்த தேர்தல் ஆணையத்திற்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறதென்றும் அவர்கள் அதைக் கட்டாயம் செய்யவேண்டுமெனவும் நீதிபதி கோஸ்லே தெரிவித்தார்.

ஆதாரம்: கரவன் நியூஸ்