மல்வத்த மஹாநாயக்க தேரர் ஜனாதிபதியைச் சந்திக்க மறுப்பு
மல்வத்த மஹாநாயக்க தேரர் திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரரை இன்று காலை சந்திக்க ஜனாதிபதி சிறிசேன எடுத்த முயற்சி தோல்வி கண்டது. தற்பொழுது நிலவி வரும் அரசியல் குழப்ப நிலை சம்பந்தமாக தேரரைச் சந்திக்க ஜனாதிபதி முயன்றும் அவரைச் சந்திக்க தேரர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனல் இச் செய்தியை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறைத்து விட்டது.
அரசியல் சாசனத்தின் 19 வது திருத்தத்தின் சரத்துக்களை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் யாப்பு விதிகளை ஜனாதிபதி மீறிச் செயற்படுகிறார் எனக் குற்றம்சாட்டி தேரர் அவரைச் சந்திக்க மறுத்து விட்டார்.
இருப்பினும் பலரின் வற்புறுத்தலுக்கிணங்கி UPFA செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவை தேரர் சந்திக்க இணக்கம் தெரிவித்தார் என அறியப்படுக்கிறது.