International Medical Health Org. (IMHO)

மலையகம் 200: பெரு வெற்றியளித்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) கல்வித் திட்டம்

மலையக வாழ் மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடந்த பல வருடங்களாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு செய்து மேற்கொண்டுவரும் செயற்திட்டங்கள் பலந்தரும் நிலையை எட்டியுள்ளன. இவற்றில் குடிநீர் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், கல்வி வளர்ச்சித் திட்டம் எனப் பல அடங்கும். இவற்றில் ஒன்றாக சப்ரகமுவ மாகாணத்தின் நிவித்திகல கல்வி வலயத்தில் அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்ட கல்வி மேம்பாட்டு வகுப்புகளின் காரணமாக இவ்வலயப் பாடசாலைகளில் இரண்டாவது தடவையாக க.பொ.த (சா) பரீட்சையில் மாணவர்கள் பெரு வெற்றியைக் கண்டுள்ளனர்.

2022 ம் ஆண்டுக்கான க.பொ.த. (சா) பரீட்சையில் பங்குபற்றிய பாடசாலைகளின் பெறுபேறுகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

நிவித்திகல கல்வி வலயத்திலிருந்து பங்குபற்றிய பாடசாலைகள்:

இலபாடசாலையின் பெயர்தோற்றிய மாணவர்கள்தேறிய மாணவர்கள்தரமறியப்படாத மாணவர்கள்விகிதாசாரம்
01டெலா த.வி.39230658.9%
02கலவான த்.வி.161062.5%
03ஹோப் த.வி.40200850%
04டி/பாரதி த.வி.17070441.1%
05சிறீ வள்ளுவர் த.வி.120866.6%
06மடபதன த.வி.15120380%
07பிறைட்டன் த,வி.120866.6%
08மீனாட்சியம்மாள் த்.வி.45100522.2%
மொத்தம்196982649.9%
Result Analysis Report – O/L Examination 2022 Batch (2023) – Nivithigala Education Zone – Sabaragamuwa Province

மேற்காணப்படும் பாடசாலைகளிலிருந்து 196 மாணவர்கள் 2022 க.பொ.த.(சா) பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இப்பரீட்சையில் பலவகையான பாடங்களை மாணவர்கள் தேர்ந்திருந்தாலும் எமது குறியாக கணிதம் போன்ற பாடங்களே இருந்தன. தோற்றிய 196 மாணவர்களில் 98 மாணவர்கள் கணிதமுள்ளிட்ட பாடங்களில் சித்திபெற்றுள்ளார்கள் என்பது பெருமைக்குரியது. அதாவது தோற்றிய மாணவர்களில் 49.9%, ஏறக்குறைய 50% மான மாணவர்கள் அமோக வெற்றியைக் கண்டுள்ளனர். இந்த 196 மாணவர்களில் 26 பேர் (10.75%) கணிதம் உட்படாத பாடங்களில் சித்திபெற்றுள்ளனர். மொத்தம் 124 (60.74%) மாணவர்கள் க.பொ.த. (உ.த.) வகுப்புகளைத் தொடரவுள்ளனர்.

இதில் குறிப்ப்டக்கூடிய விடயம் என்னவென்றால் டெலா த.ம.வி. த்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களில் 10 பேர் கணிதமுட்பட்ட பாடங்களில் சித்தியெய்தியுள்ளதுடன் மேலு இரண்டு பேர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு உணவு வழங்களைச் செய்திருந்தமை குறிப்பிடப்படவேண்டியது.

இப்பெரு வெற்றியானது, தெரிந்தெடுக்கப்பட்ட கல்வி வலயங்களில் இருக்கக்கூடிய தேவைகளை அறிந்து அவற்றிற்குப் பரிகாரம் தேடும் வகையில் செயற்திட்டங்களை மேற்கொள்வதில் உள்ள அவசியத்தையும் அதைச் சாதிக்ககூடிய வழிமுறைகளையும் வலியுறுத்தி நிற்கிறது.

மாணவர்களின் பெறுபேறுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து அவற்றைப் புள்ளியியல் முறைகளில் தரம்பிரித்து தேவைகளையும் செயற்பாடுகளையும் அறிந்து செயற்திட்டங்களைப் படிமுறைப்படுத்துவதில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு கண்டுவரும் வெற்றிகள் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பலாம்.