Spread the love

பெப்ரவரி 29, 2020

மலேசிய பிரதமராக திரு முகைதீன் யாசின் தெரிவு! 1
மலேஇயாவின் மாமன்னர் சுல்தான் அப்துல்லா றியாட்

மலேசிய பிரதமர் டாக்டர் மகதிர் சில நாட்களின்முன் திடீரெனப் பதவி துறந்ததைத் தொடர்ந்து, மலேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக, திரு முகைதீன் யாசினை, அந் நாட்டின் மாமன்னர் தெரிவு செய்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்களை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் மாமன்னர் இம் முடிவுக்கு வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, திரு முகைதீன் யாசின் நாளை காலை 10:30 மணிக்கு பிரதமராகப் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டாக்டர் மகதிருக்கும், அவரது கூட்டணியில் அங்கம் வகித்த பங்காளிக்கட்சியின் தலைவரான முகைதீன் யாசினுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மகதிர் பதவியைத் துறந்துவிட்டு அடுத்த பிரதமரைத் தெரியும்வரை, அரசாங்கத்தின் தற்காலிகத் தலைவராக இருந்து வந்தார்.

அதே வேளை இந்த இருவரில் எவர் அதிக எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவைக் கொண்டிருப்பாரோ அவர் அரசாங்கத்தை அமைக்கலாம் என்னும் நிலைமை இருந்தது. இருப்பினும், டாக்டர் மகதிர், பதவி விலகிய கட்சித் தலைமையை மீண்டும் ஏற்றுப் பிரதமராவார் எனவும் அதற்கான உறுப்பினர் ஆதரவு அவருக்கிருந்தது எனவும் பேசப்பட்டது. இந்நிலையில், அரண்மனையிலிருந்து மன்னர் இவ்வறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

“அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, பிபிபிஎம் கட்சியின் தலைவரான திரு முகைதீன் யாசின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக மாமன்னர் ஊகிக்கிறார்,” என்று  இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  1,000 த்துக்கு மேலான பிரித்தானிய மருத்துவர்கள் தேசிய சேவையிலிருந்து வெளியேற உத்தேசம்
மலேசிய பிரதமராக திரு முகைதீன் யாசின் தெரிவு!

மலேசிய பிரதமராக திரு முகைதீன் யாசின் தெரிவு!