மலேசியா | ஜி. சாமிநாதனுக்குத் தொடர்ந்தும் விளக்க மறியல்

Spread the love

ஜனவரி 29, 2020

மலாக்கா சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனுக்குப் பிணை மறுப்பு

மலாக்கா காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனின் பிணைக் கோரிக்கை மீதான வழக்கு இன்று மலேசிய நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட அவரது பிணைக் கோரிக்கை மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதி ஆணையாளர் டட்டுக் அஹ்மட் ஷாஹ்ரிர் மொஹாமெட் சாலே அவரது கோரிக்கையை நிராகரித்து தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனவும், அவர்கள் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தார் எனவும் ஜி.சாமிநாதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சொஸ்மா எனப்படும் பாதுபாப்புக் குற்றங்கள் (விசேட நடவடிக்கைகள்) சட்டம் 2012 இன் 13 வது பிரிவின் பிரகாரம் ஜி.சாமிநாதனைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதாக நீதிபதி கூறினார்.

இச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதென உயர் நீதிமன்ற நீதிபதி மொஹாமெட் நஸ்லான் மொஹாமெட் கசாலி தீர்ப்பளித்திருந்தும் அது சட்டப் புத்தகத்திலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை எனவும் தான் அச்சட்டத்துக்கு கட்டுபட்டு இத் தீர்ப்பை அளிக்கிறேன் எனவும் ஆணையாளர் டட்டுக் அஹமெட் சாலே தெரிவித்தார்.

சொஸ்மாவின் 13 வது பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானதென உயர் நீதிமன்ற நீதிபதி நவம்பர் 29 இல் தீர்ப்பளித்திருந்தும் அதை உள்துறை அமைச்சு இன்னும் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கவில்லையென நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நவம்பர் 2018 இல் மலாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியிருந்தார் எனவும், அக்டோபர் 2019 இல் அவரது கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகள் பற்றிய ஆவணங்களை வைத்திருந்தார் எனவும் சாமிநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>