‘மருதநாயகம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட எலிசபெத் மஹாராணி
கமல்ஹாசன் தயாரித்து வெளிவராமலிருக்கும் ‘மருதநாயகம்’ படப்பிடிப்பில் மறைந்த எலிசபெத் மஹாராணி கலந்துகொண்டு வாழ்த்தியதாக கமல் தெரிவித்துள்ளார்.
மஹாராஅணியாரின் இறப்பு குறித்து வெளியிட்ட ருவிட்டர் செய்தியில் “மஹாராணியார் பிரித்தானியர்களால் மட்டுமல்ல உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘மருதநாயகம்’ ஒன்றே மஹாராணியார் கலந்துகொண்ட படப்பிடிப்பாக இருக்கம்டியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆரம்பகர்த்தாவும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் மஹாராணியாரின் மரணம் குறித்து வெள்ளியன்று இரங்கலுரையொன்றைத் தனது ருவிட்டர் தளத்தின் மூலம் வெளியிட்டிருந்தார். இதில், 1997 இல் மஹாராணியார் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது தனது அழைப்பை ஏற்று அவர் ‘மருதநாயகம்’ படப்பிடிப்பின் ஆரம்ப விழாவுக்கு வந்திருந்ததாகவும் அதுவே அவர் பார்த்த ஒரே ஒரு படப்பிடிப்பாக இருக்குமெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐந்து வருடங்களுக்கு முன்னர் தான் இங்கிலாந்துக்கு கலாச்சார விழாவொன்றிற்குச் சென்றிருந்தபோது பக்கிங்ஹாம் அரணமனைக்குச் சென்று மஹாராணியாரைச் சந்தித்திருந்ததகவும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.