EnvironmentSri Lanka

மன்னார் தீவில் கனிமமண் அகழ்வு – அவுஸ்திரேலிய நிறுவனத்துக்குத் தாரை வார்ப்பு

8,000 குடும்பங்கள் வரை பாதிக்கப்படலாம்

கனிமமண் அகழ்விற்கென மன்னார்தீவில் பெரும் பிரதேசத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. டிசம்பரில் ஆரம்பிக்கப்படவிருக்கும் இவ்வகழ்விற்கான உரிமம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைற்றேனியம் ஸாண்ட்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது என மன்னார் மக்கள் குழுத் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 வரை இப் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் 3,500 இற்கும் அதிகமான பரிசோதனைக்குழிகள் தோண்டப்பட்டு அதிலிருந்து பெறப்பட்ட 900 மாதிரிகள் (samples) கொழும்புத் துறைமுகம் மூலம் கேப்ரவுணுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதுபற்றி அரச அதிகாரிகளிடம் வினவியபோது “அது தமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம்” என அவர்கள் தெரிவித்ததாகவும் இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இவ்வாகழ்வை நிறுத்தவேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் திரு ஞானப்பிரகாசம் தெரிவித்துய்ள்ளார். அதே வேளை இவ்வகழ்வை நிறுத்துவதற்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்குத் தாம் தயாராகிவருவதாகவும் இவ்விடயத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் ஆதரவுதருகிறார்கள் எனவும் மக்கள் குழு தெரிவித்திருக்கிறது. சூலலுக்கான நீதி மையம் என்ற அமைப்பு இதற்கான சட்ட உதவிகளைச் செய்துவருகிறது.

இப்பிரதேசம் பல்லின, பல்நாட்டுப் பறவைகளும் சங்கமிக்கும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். (நன்றி: ஐலண்ட்)