மத்திய கிழக்கு வான் பிரதேசத்தில் பறக்கும் தட்டு!
பெண்டகன் உறுதிப்படுத்தியது
மத்திய கிழக்கு வான் வெளியில் பிரவேசித்த பறக்கும் தட்டு ஒன்றை அமெரிக்க ஆளில்லா உளவு விமானமொன்று படம் பிடித்திருக்கிறது. சென்ற வருடம் நடைபெற்ற இச்சம்பவத்தை பெண்டகன் இப்போது வெளியிட்டிருக்கிறது.
பறக்கும் தட்டு மற்றும் வேற்றுலக வாசிகள் பற்றிய சம்பவங்களை அமெரிக்க உளவு நிறுவனம் இரகசியமாக வைத்திருப்பது வழக்கம். இருப்பினும் இச்சம்பவம் பற்றிய தகவல்களை பெண்டகன் வெளியிட்டிருக்கிறது. முன்னர் UFO (Unidentified Flying Object) எனப் பறக்கும் தட்டுகளை பெண்டகன் அழைப்பது வழக்கம். தற்போது இப்பதத்தை மாற்றி UAP (Unexplained Anomalous Phenomena) என அழைக்கிறது.
10,000 முதல் 30,000 அடிகள் உயரத்தில் பறந்த இத் தட்டு வெள்ளி நிறத்தில் மங்கிய கண்ணாடி-உலோகத்தினாலான கோள வடிவத்தில் இருந்தது எனவும், வழமையான தீப்பிழம்பு எதையும் அது வெளிப்படுத்தியிருக்கவில்லை எனவும் இச்சமபவத்தின் காணொளியை ஆராய்ந்த பெண்டகன் அதிகாரி செனட்சபையில் தெரிவித்துள்ளார்.