மதுவை ஒளித்து வைத்ததற்காக இலங்கையைச் சேர்ந்த சபரிமலைப் பக்தர் தன் சகோதரியைக் கொலை செய்தார்!

Spread the love

ஜனவரி 26, 2020


இலங்கையிலிருந்து சபரிமலை யாத்திரை வந்த 50 வயதுள்ள குகதாசன் என்பவர் தனது மதுப் போத்தலை ஒளித்துவைத்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் அவரது சகோதரியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இலங்கை வாசியான குகதாசன் சபரிமலை யாத்திரை செல்வதற்காகச் 10 நாட்களின் முன் சென்னை வந்து அங்கு வலசரவாக்கத்திலுள்ள வேலன் நகரில் வசித்துவந்த அவரது சகோதரியான ஆர்.தியாகேஸ்வரி என்பவரது வீட்டில் தங்கியுள்ளார். அருகிலுள்ள புகைப்பட நிலையத்தில் பணி புரிந்து வந்த தியாகேஸ்வரி வேலன் நகரில் ஒரு வாடகை வீட்டில் அவரது மகன் அதிஷன் மற்றும், 81 வயதுடைய தாயார் வேதநாயகி ஆகியோருடன் வசித்து வந்தார். யாத்திரைக்கென வந்த குகதாசனும் சிலநாட்கள் அவருடன் தங்கியிருந்தார்.

“நேற்று (வெள்ளிக் கிழமை) சபரிமலையிலிருந்து திரும்பி வந்த குகதாசன் அதிக அளவில் மது அருந்தியிருந்திருக்கிறார். மது வெறியில் தனது மதுப் போத்தலை ஒளித்தி வைத்துவிட்டார் எனக் குற்றஞ்சாட்டி, தியாகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஆரம்பித்து கடும் கோபம் கொண்ட நிலையில் குகதாசன் அவரது சகோதரியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்” எனக் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இதன் போது சண்டையைத் தடுக்க முற்பட்ட தியாகேஸ்வரியின் மகன் அதிஷனுக்கும் மார்பில் கத்தியால் குத்தியதாகவும், தாயார் வேதநாயகியைத் தள்ளி விழுத்தியதால் தாயாரின் இடுப்பெலும்பு முறிந்து விட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குகதாசன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  இந்தியா முழுவதும் நடமாட்டத் தடை | இன்று நள்ளிரவு முதல்!

Leave a Reply

>/center>