மண்டைதீவில் கடற்படையினரால் மேலும் 18 ஏக்கர் தனியார் காணி அபகரிப்பு!
யாழ்/ மண்டைதீவில் 29 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை அபகரிக்க இலங்கை கடற்படை முனைவதைத் தடுக்க பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மண்டைதீவில் ஏற்கெனவே அமைந்திருக்கும் வெலுசுமன கடற்படை முகாமை விரிவுபடுத்துவதற்காக இம்முயற்சி பேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் பொலிசாரின் மிகையான கண்காணிப்பையும் மீறி பொதுமக்களும் அரசியல்வாதிகளும் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் நவம்பர் 2020 இல் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சி பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கொண்ட கடும் எதிர்ப்பினால் பிந்போடப்பட்டிருந்தது. (Source: LanakaFiles)