மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு -

மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு

இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியது காரணம்!

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் போன்ற பலர் சமீபத்தில்பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

video Credit: NDTV

மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் சமீப காலங்களில் சிறுபான்மை இனத்தவர் தாக்கப்பட்டு வருகின்றனர். கும்பல்களாக வரும் காடையர்கள் ‘ஜெய் சிறீராம்’ என்று கோஷமிடச் சொல்லி சிறுபான்மை இனத்தவரைக் கட்டளையிட்டுக்கொண்டு அவர்களைத் தாக்கி வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்திருந்தன. இத் தாகுதல்களை நிறுத்துமாறு கோரி மணிரத்னம் உட்பட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

இக் கடிதம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு சமீபத்தில் மிஜாப்பூர் நீதிபதி சூர்யா காந்த் திவாரி அவர்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவில் கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத் துரோக குற்றங்களுக்காக முதற் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட்டது, பிரதமரின் பெயருக்குக் களங்கம் விளைவித்தது, நாட்டில் அமைதியைச் சீர்குலைத்து பிரிவினையை ஊக்குவிக்கும் முறையில் நடந்துகொண்டது என்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது பதியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மணிரத்னம் உட்பட்ட 49 பேரும் விரைவில் கைதுசெய்யப்படலாம் என நம்பப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கமல் ஹாசனுக்கு 65 வயது: பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்!
error

Enjoy this blog? Please spread the word :)