மட்டக்களப்பின் முன்னாள் மகிமை மீட்டெடுக்கப்படும்-சம்பிக்க -

மட்டக்களப்பின் முன்னாள் மகிமை மீட்டெடுக்கப்படும்-சம்பிக்க

Spread the love
Former glory of Batticaloa will be restored
மட்டக்களப்பு நகரம்

ஆயுதப்போராட்டத்தின்போது சீரழிந்த மட்டக்களப்பு நகரம் முன்பிருந்த அதன் மகிமையை மீண்டும் பெற அரசு பல திட்ட்டங்களைத் தீட்டியுள்ளது என மட்டக்களப்பு பொது மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடத்தைத் திறந்துவைத்துப் பேசும்போது பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இத் தரிப்பிடம் அமைச்சின் கீழ் இயங்கும் ‘சுகித புறவற’ திட்டத்தின் கீழ் 65 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

தேசிய பெளதீக திட்டக் கொள்கைக்கு (National Physical Planning Policy) அமைய, நான்கு பாதைகள் அடையாளம் காணப்பட்டு அப்பாதையிலமைந்துள்ள சிறுநகரங்களை அபிவிருத்தி செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது. அவை: குருநாகல ஊடாகக் கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் பாதை, காலியிலிருந்து திசமஹரமா போகும் பாதை, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் பாதை மற்றும் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பினூடாக அம்பாறை செல்லும் பாதை ஆகிய நான்குமாகும். இவற்றில் மட்டக்களப்பும் அம்பாறையும் தொடக்க நகரங்களாக இருக்கும். மேற்கு மாகாணத்துக்கு வெளியே அபிவிருத்திகளைச் செய்ய 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னரே சந்தர்ப்பம் கிடைத்தது என அமைச்சர் தெரிவித்தார்.

” நிதி ஒதுக்கீட்டு விடயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டதாக மட்டக்களப்பு நகரபிதா தியாகராஜா சரவணபவன் கூறினார். ஆனால் எங்கள் அமைச்சுசகல முக்கிய நகரங்களையும் பாரபட்சமின்றி அபிவிருத்தி செய்யும். நான் உறுதி கூறியது போல, யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய பேருந்து தரிப்பிடமும், நகரமண்டபமும் நிறுவுவதற்குத் தேவையான திட்டமிடல் அறிக்கைகள் தயாராகிவிட்டன. அதே போல், நகரபிதா கேட்டுக்கொண்டதற்கமைய புதிய நகரமண்டபம் ஒன்றும் மட்டக்களப்பு மாநகர வளாகத்தில் நிறுவப்படும்” என அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம், அனுராதபுரம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான பண உதவி, வெளி வளத் திணைக்களத்தினூடாகக் கிடைத்திருக்கின்றது. எதிர்காலத்தில் தம்புல்ல, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும். சர்வதேச விமான நிலையமும், துறைமுகமும் இருப்பதால் மேற்கு மாகாணம் உல்லாசப்பயணிகளை ஈர்க்கக்கூடியதாகவிருக்கிறது. மட்டக்களப்பு விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச தரத்துக்குக் கொண்டுவரப்பட்டு உல்லாசப்பயணிகளைக் கவர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“போராட்டம் முடிந்ததற்குப் பிறகு, நான் மின்சார வாரிய அமச்சராகப் பதவியேற்ற போது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் 30 வீதமான இடங்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டது. நான் அதை 90 வீதத்துக்கு அதிகரித்தேன். கிழக்கு மாகாணத்தின் வேலையில்லாத இளையோருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து கனடாவுக்கோ, ஐக்கிய இராச்சியத்துக்கோ குடிபெயராமல் செங்கலடியையும், வாழைச்சேனையையும் வளம்படுத்திக்கொண்டு மட்டக்களப்பில் வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினேன். எனது உத்தேசம், மட்டக்களப்பு-திருகோணமலை பெருந்தெருவை அபிவிருத்தி செய்து கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலை போன்று ஆக்கவேண்டுமென்பதே” என்று மேலும் தெரிவித்தார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error