மங்கள சமரவீர காலமானார்!


முன்னாள் நல்லாட்சி அரசாங்க அமைச்சர் மங்கள சமரவீர கோவிட் நோய் தொற்றினால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமையால் இன்று (24) மரணமானார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த அவர் சமீபத்தில் நோய்த் தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமையால் அவர் காலமாகிவிட்டதாக ‘கொலொம்பொ பேஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இறக்கும்போது அவருக்கு 65 வயது.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் சென்ற அவர் முந்தைய அரசாங்கங்களில் நிதி, வெளி விவகாரம், ஊடகம் ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.