போர் வெற்றியைத் தேர்தல் பிரசாரத்துக்காகப் பாவிக்க முடியாது - தேர்தல் ஆணையம் -

போர் வெற்றியைத் தேர்தல் பிரசாரத்துக்காகப் பாவிக்க முடியாது – தேர்தல் ஆணையம்

Spread the love

அக்டோபர் 16, 2019

ஜனாதிபதி தேர்தலில் போர் வெற்றியைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

” போர் எந்தவொரு கட்சிக்கும் உரியதல்ல. அது நாட்டிற்குரியது. நாடு மக்களாலானது. எனவே எந்தவொரு கட்சியும் போரைத் தனது தேர்தல் பிரசாரத்துக்காகப் பாவிக்க முடியாது” எனத் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

சமீபத்தில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவர்களும், வேறு சில இராணுவ அதிகாரிகளும் தேர்தலில் தமது ஆதரவு பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய ராஜபக்சவுக்கே என விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் ஜனாதிபதி அலுவலகத்திடமும் விளக்கம் கேட்டுள்ளதாக தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

அரச பணிகளிலுள்ளோர் சட்டப்படி தேர்தலில் ஈடுபடமுடியாதெனவும் இது விடயத்தில் இராணுவத் தளபதி நிலமையை விளக்கவேண்டுமென்று தான் கேட்டுள்ளதாகவும், முன்னாள் இராணுவ அதிகாரி தன் சீறுடையில் எடுத்த படத்தைத் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  தமிழருக்கொரு நியாயமான தீர்வை முன்வைத்தால் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும்- சபையில் திரு.சம்பந்தன்