பொலிவூட் நடிகர் ஆமிர் கான் – விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கப் போட்டி

கோவிட் நிதிக்காக, ‘செக்மேற் கோவிட்’ என்ற பெயரில், செஸ்.காம் ஒழுங்கு செய்கிறது. ‘கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதனுடன் பல பிரபலங்கள் விளையாடவுள்ளனர்

பிரபல பொலிவூட் நடிகரும், சமூக சேவைகள் செயற்பாட்டாளருமான ஆமிர் கான், சதுரங்கப் போட்டியில் ‘கிராண்ட் மாஸ்டர்’ நிலையை எட்டிய உலக சம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்துகொள்ளும் நட்சத்திர சதுரங்கப்ப் போட்டியொன்றை ‘செஸ்.காம்’ ஒழுங்கு செய்துள்ளது.

‘செக்மேட் கோவிட்’ என்ற பெயரில், ஜூந் 13 இல் ஆரம்பிக்கவிருக்கும் இப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துடன் வேறு பல நட்சத்திர ஆட்டக்காரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சதுரங்க ஆட்டப் பிரியரான பொலிவூட் சுப்பர்ஸ்டார் ஆமிர் கான் விஸ்வநாதனுடன் முதலாவது ஆட்டத்தை ஆரம்பித்து வைப்பார் எனக் கூறுவதோடு, கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிதிக்காக நடைபெறும் இந்நிகழ்விற்குத் தாராளமாக பங்களிப்பைச் செய்யுமாறும் ‘செஸ்.காம்’ கேட்டுள்ளது.

சமூக செயற்பாடுகளில் ஆமிர் கான் மிகவும் அர்ப்பணிப்போடு ஈடுபடும் ஒருவர் என உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.