பொரளை மயானத்தில் தமிழில் தேசிய கீதம்

பெப்ரவரி 4, 2020

இந்த வருடம் (2020), கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந் நிகழ்வைப் புறக்கணித்தனர்.

இனக்களுக்கிடையேயான நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக, முந்திய அரசாங்கம் வருடாந்த கொண்டாட்டங்களின்போது தேசிய கீதத்தைத் தமிழிலும் பாடி வந்திருந்தது.

இதற்கு எதிர்ப்புக் காட்டும் முகமாக சில செயற்பாட்டாளர்கள் பொரளை மயானத்தை அண்டியுள்ள தெரு வளைவில் கூடி தேசிய கீதத்தைச் சிங்களத்திலும் தமிழிலும் பாடினார்கள்.

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டுமெனக் கடும்போக்கு நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்ததைக் கண்டிக்கும் முகமாக இன்றய தினத்தைக் கறுப்பாடைகளை அணிவதன் மூலம் துக்க தினமாக அவர்கள் கொண்டாடியிருந்தார்கள்.

உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்னிலையில் நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பாடமை குறித்து தான் வெட்கமும், துயரமும் அடைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தந்து டுவீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“இதன் மூலம் அரசாங்கம் இலங்கையின் அடையாளத்தை நிர்மூலமாக்குவதோடு தேசியவாதிகளை ஏமாற்றியும்,பிரிவினைவாதிகளை நியாயப்படுத்தியும் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.